எதிர்காலத்தில் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 4,000 ரூபாவை தாண்டும் என இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.
வற் வரி உட்பட பல வரிகள் அதிகரிக்கப்படுவதால் சீமெந்தின் விலை அதிகரிக்கும் என சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சீமெந்து மூட்டை ஒன்றின் விலை ரூ. 3,000 ஆக உயர்ந்துள்ளதாகவும், வரி அதிகரிப்பால் இது கணிசமாக உயரும் என்றும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)