
இலங்கை மக்கள் தொடர்பில் உலக வங்கி கரிசனை கொண்டுள்ளதாகவும், இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்பதற்கு பொருத்தமான கொள்கைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கைக்கு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட சில நிதித் திட்டங்களை மீளாய்வு செய்துள்ளதாகவும், இலங்கைக்கு மருந்துகள், ஏழை விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நிதியுதவி வழங்குமாறும் உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)