
(பொதுவான ஒரு நோக்கு)
இந்த நவீன யுகத்திலும் கூட எமது முஸ்லிம் சமூகம் பிறை விடயத்தில் முரண்பட்டுக் கொள்வது வழக்கமாகி விட்டது. பிறை தொடர்பான சர்ச்சைகள் இந்த வருடத்துடன் முடியும். இதில் பாடம் படிப்போம் என நினைத்தாலும், தொடர்ந்தும் இதே தவறை நாம் செய்து வருகின்றோமே தவிர இதில் நாம் இன்னும் பாடம் கற்றதாகத் தெரியவில்லை.
இதற்கான காரணங்கள் என்ன?
கடந்த இரண்டாம் திகதி அன்று, இரவு ஞாயிறு பின் நேரம் திங்கள் இரவு, பத்து மணிகளுக்கும் பின் பலகத்துறை பகுதியில் பிறை தென்பட்டதாகவும், அதை அவர்கள் பிறை சம்மந்தமான பொறுப்புதாரிகளுக்கு அறிவித்ததாகவும், அவர்கள் அச் செய்தி தொடர்பில் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், இணையவழி தகவல்கள் பரவிய வண்ணம் இருந்தன.
இது தொடர்பான தகவல்களில் பிறை கண்டவர்களை தொடர்பு கொள்ள முற்பட்டபோது, அதில் சிலரின் தொலைபேசிகள் செயல் இழந்து இருந்தன. இன்னும் சிலரின் செய்திகள் குழப்பமான தாக இருந்தது.
வானிலை அவதான நிலையத்தின் அறிக்கையின்படி மாலை ஆறு மணி முப்பத்தி ஏழு நிமிடம் அளவில் பிறை உதிக்கும் என்ன குறிப்பிடப்பட்டு இருந்தபோதிலும், பிறையை கண்டவர்களின் தகவல்களில் சில நேர வித்தியாசங்களும் காணப்பட்டன.
எது எவ்வாறு இருந்தாலும் ஒருவர் தலைப்பிறையை கண்டவராக இருந்தால், சமூகத்திற்கு அதை எத்தி வைப்பது அவரது அவர் மீது கடமையாகி விடுகின்றது.
இதேவேளை இஸ்லாத்தில் தலைமைத்துவம் ஒன்றை பின்பற்றுவது நபிகள் நாயகம் அவர்கள் கட்டாயப்படுத்தி இருப்பதால், அந்த விடயத்தை நமது நாட்டில் பிறை விடயத்தில் தலைமை வகிக்கும் பிறை குழுவிற்கு
அல்லது அகில இலங்கை ஜமியத்துல் உலமாவிற்கு தகுந்த ஆதாரங்களுடன்
எத்தி வைப்பது இஸ்லாமிய வழிமுறையின் படி அவர்களின் கட்டாயக் கடமையாகும்.
அவர்கள் இஸ்லாத்துக்கு மாற்றமான முறையில் விதண்டாவாதமாக அல்லது வேறு காரணங்களுக்காக அதை ஏற்றுக் கொள்ளாவிடில் தலைமைத்துவத்தில் இருந்து விலகி, முஸ்லிம் உம்மத்திற்கு வேறுவகையில் அத் தகவலை எத்தி வைப்பதற்கு அந்த அடிப்படையில் பூரண உரிமையுண்டு. அத்தோடு அவ்வாறு எத்திவைப்பதன் மூலம் நோன்பு நோக்க தடை செய்யப்பட்ட நாளில், அந்தப் பாவத்தில் இருந்து மக்களை காப்பாற்றிய நண்மையையும் அவருக்கு எழுதிட அல்லாஹ் போதுமானவன்.
இந்த வகையில் பிறை கண்டதாக பல குரல் பதிவுகள் வெளிவந்த போதிலும், பிறை கண்டவர் நேரடியாக தனது பெயர் ஊர் போன்றவற்றைக் குறிப்பிட்டு, தான் பிறை கண்டதாக எந்தவிதமான நேரடி குரல் பதிவுகளையும் வெளியிடவில்லை.
மேலும் தலைப்பிறையை பலர் கண்டார்கள் என தகவல்கள் வெளியாகிய போதிலும், அவர்களில் ஒருவர்கூட, அல்லாஹ் மீது சத்தியம் செய்து ஒரு குரல் பதிவுகளையோ காணொளிகளையோ, வெளியிடவில்லை. அல்லாஹ்வுக்காக என மனத் தூய்மையோடு ஒரு விடயத்தில் நாம் வெளிக்கிடும் போது எந்த விதமான உலக சக்திகளுக்கும் பயப்பட வேண்டியதில்லை.
எனவே இந்தச் செய்தியை அவ்வாறு அறிவிக்க அவர்கள் பிர சக்திகளுக்கு பயந்தார்கள். அல்லது அவர்கள் பிறை கண்ட செய்தியில் அவர்களுக்கே ஒரு சந்தேகம் உள்ளது என்ற அடிப்படையில் நோக்க வேண்டியுள்ளது.
இந்தச் செய்தியில் அவர்கள் குறிப்பிடும் போது, ஒரு நபர் கண்டதாகவும், அவர்களுடன் இருந்த இன்னும் இரண்டு பேர் அவர்கள் கண்டதில் சந்தேகம் உள்ளதாகவும், இன்னொரு மூன்றாம் நபர், பிறையை கண்டதாகவும் குறிப்பிடுகின்றார்.
அவ்வாறு பிறை கண்டு எத்தி வைத்த செய்தியை பொறுப்புதாரிகள் ஏற்க மறுத்திருந்தால், பிறை கண்டவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, பிறை கண்ட செய்தியை அல்லாஹ் மீது சத்தியமிட்டவர்களாக, ஒரு காணொளியை பதிவு செய்து மக்களுக்கு தெரிவித்து இருக்க முடியும். அதற்காக எந்த சக்திகளுக்கும் அவர்கள் பயப்பட வேண்டியதில்லை. அது அவர்களின் கடமையாகும்.
கிண்ணியாவில் பிறை தென்பட்டு, அதை ஏற்க மறுத்த பட்சத்தில் அவர்கள் மக்களிடம் அச் செய்தியை கொண்டு செல்ல அவ்வாறான ஒரு முறையை கைக் கொண்டார்கள். இது ஒரு வரவேற்கத்தக்க முறையாவதோடு இனிவரும் காலங்களில் பொறுப்புதாரிகள் தங்களது பொறுப்புகளை சரிவரச் செய்வதற்கு இவ்வாறான செயல்கள் வழிவகுக்கும்.
உண்மையிலே பிறை கண்டு அவர்கள் புறச் சக்திகளுக்கு பயந்து உண்மையை வெளியிடாதவர்களாக இருந்திருந்தால், நிச்சயம் அவர்கள் அதற்கான பொறுப்புதாரிகளாவார்கள்.
மேலும் இது சம்பந்தமாக விளக்கமளிக்கும் போது தொலைபேசி மூலம் விளக்கமளித்த மதிப்பிற்குறிய உலமா அவர்கள் குறிப்பிடும் போது,
"இன்றைய நாளில் அவ்வாறான பிறையை அவர் கண்டிருந்தால், அவரும் அனைவருடனும் சேர்ந்து நோன்பு நோற்பதே ஸலாமத் ஆகும் எனக் குறிப்பிடுகின்றார்"
இவ்வாறான ஒரு விளக்கம் பிறை கண்டவர் எப்படி நோன்பு நோற்பார் என்பது சம்பந்தமாகவும் மக்கள் கேள்வி எழுப்பினர்.
மற்றும் அவர் அவ்வாறான ஒரு பிறையை கண்டிருந்தால் அதை யாரிடமும் சொல்லக்கூடாது, தன் தாய் தகப்பனிடமும்
கூட சொல்லக்கூடாது என ஒரு தீர்ப்பை வழங்குகின்றார்.
இந்நிலையில் பிறை பார்க்கும் நாலாக ஒரு நாளை அறிவித்து, தலைப் பிறை கண்டவர்கள் அதனை அறியத் தாருங்கள் என தொலைபேசி இலக்கங்களுடன் விளம்பரப்படுத்தி, எவ்வாறு பிறை கண்டவர்கள் அறியத்தாருங்கள் என அறிவித்த பின்னர், கண்ட
பிறையை யாரிடமும் அறிவிக்கக் கூடாது, தன் தாய் தகப்பனிடமும் அறிவிக்கக்கூடாது, எனக் கூறுவது வாதத்துக்கு பொருந்தாத முன் பின் மாறுபடும் ஒரு கருத்தாகும்.
எனவே தொடர்ந்து வரும் காலங்களில் பிறைகள் தென்பட்டு, அவ்வாறு பொறுப்புதாரிகள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் பட்சத்தில், மக்களுக்கு அதை கொண்டு போய் சேர்க்கும் நுட்பமான முறையை சமூகம் கைக்கொள்ள வேண்டும்.
மறுபுறம் தமது பொறுப்புக்களை சரிவரச் செய்ய பொறுப்புதாரிகளும்
உணர்ந்து கொள்ள வேண்டும்.
எனவே இவ்வாறான பிழைகளை மக்களும் பொறுப்புதாரிகளும் தவிர்ந்து கொண்டு இனிவரும் காலங்களில் பிறை சர்ச்சைகள் ஏற்படாமல் காத்துக் கொள்வோமாக.
அனைத்துக்கும் அல்லாஹ் போதுமானவன்.
-பேருவளை ஹில்மி