
எவ்வாறாயினும், கொழும்பு பிரதேசத்தில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடியில் உள்ளுர் முன்னணி நிறுவனமொன்றினால் உற்பத்தி செய்யப்பட்ட நாட்டு அரிசி மேற்கண்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நுகர்வோர் அதிகாரசபையின் குற்றவியல் திருத்தச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைக்கு கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று (27) 500,000 ரூபா அபராதம் விதித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் அரிசியின் கட்டுப்பாட்டு விலை தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)