
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களின் வாகனங்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தப்பட்டதை அடுத்து அவரது எச்சரிக்கை வந்துள்ளது.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த சில வாரங்களாக அலரிமாளிகைக்கு அருகாமையிலும், கொழும்பு காலிமுகத்திடலிலும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது SLPP ஆதரவாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்த அமைதியின்மை ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பொதுமக்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
"நீதி மற்றும் ஜனநாயக ஆட்சிக்காக மிகவும் அமைதியான முறையில் அற்புதமான போராட்டத்தை நடத்திய நமது குடிமக்கள் அனைவருக்கும், இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதற்கு நாசகாரர்கள் பயன்படுத்தப்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த ஆபத்தை தடுத்து நிறுத்துவதற்கு பொதுமக்கள் தமது நிறுவனத் திறன்களைப் பயன்படுத்துமாறும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கேட்டுக் கொண்டார். (யாழ் நியூஸ்)
I appeal to all our citizens who have carried on a Wonderful struggle for Justice and Democratic governance so PEACEFULLY,to be aware that saboteurs may be used to incite violence in order to pave the way for military rule.Please use your organisational skills to halt this danger
— Chandrika Bandaranaike Kumaratunga (@CBKsrilanka) May 10, 2022
நீங்கள் சமையல் செய்ய ஆர்வம் உடையவரா?
ஊரடங்கு அமுலில் இருக்கும் போது வீட்டில் இருக்கும் உங்களுக்கு சமையல் குறிப்புகள் மற்றும் இலகுவான வடிவில் வீடியோக்களுக்கு
Jazees Recipes YouTube Channel
இனை Subscribe செய்யுங்கள்
Link: https://youtube.com/c/JazeesRecipes
Link: https://youtube.com/c/JazeesRecipes