மஹிந்த நாட்டை விட்டு வெளியேற மாட்டார்! நாட்டை கட்டியெழுப்ப தீவிர பங்களிப்பை வழங்குவார்! -நாமல்
advertise here on top
advertise here on top

மஹிந்த நாட்டை விட்டு வெளியேற மாட்டார்! நாட்டை கட்டியெழுப்ப தீவிர பங்களிப்பை வழங்குவார்! -நாமல்


முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கி ஒரு நாள் வன்முறையைத் தூண்டியதை அடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்தவர் - நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என்று அவரது மகன் நாமல் ராஜபக்ச செவ்வாயன்று AFP இடம் தெரிவித்தார்.

திங்கட்கிழமை இரவு மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தை ஆத்திரமடைந்த மக்கள் முற்றுகையிட்டதை அடுத்து, இராணுவத்தினரால் அவர் வெளியேற்றப்பட்டார். 

“நாங்கள் நாட்டை விட்டு வெளியேறப் போகிறோம் என்று நிறைய வதந்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. நாங்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்," என்று அவர் கூறினார்.

மேலும் அவரது குடும்பத்திற்கு எதிரான தேசிய கோபத்தின் எழுச்சியை "மோசமான நிகழ்வு" என்று விவரித்தார். 

மஹிந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை எனவும், தனக்கு பின் வரும்வரை தெரிவு செய்வதில் தீவிர பங்கு வகிக்க விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

 தலைநகர் கொழும்பில் உள்ள மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையில் திங்கட்கிழமை இரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் வேலியை உடைத்து தாக்குதல் நடத்தியதையடுத்து அவர் அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

"எனது தந்தை பாதுகாப்பாக இருக்கிறார், அவர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார், அவர் குடும்பத்துடன் தொடர்பு கொள்கிறார்," என்று கடந்த மாதம் வரை நாட்டின் விளையாட்டு அமைச்சராக பணியாற்றிய நாமல் கூறினார். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.