அவசரகால சட்டம் என்றால் என்ன? தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அவசரகால சட்டம் என்றால் என்ன? தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்!


நேற்று (06) இரவு அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கத்தால் அவசர காலத் தடைச் சட்டம் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் 1953 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது அவசரகாலச் சட்டம் 25 வீதத்தில் இருந்து 70 வீதமாக உயர்த்தப்படுவதற்கு எதிரான இடதுசாரிகளின் எதிர்ப்பை எதிர்த்து அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்மூலம் பொலிஸாருக்கு மாத்திரம் இருக்கின்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்கான அதிகாரம் இதன்போது இலங்கையிலுள்ள அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் வழங்கப்படுகிறது.

இந்த அதிகாரத்தின் கீழ் முப்படையினரும் 24 மணி நேரமும் கடமையில் இருக்க வேண்டும். விடுமுறைகளை எடுக்க முடியாது.

இந்த சட்டத்தின் கீழ் நபரொருவர் எந்த நேரத்திலும் காரணமின்றி கைது செய்யப்படலாம்.

அத்துடன் சந்தேகத்தின் பேரில் எவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முடியும்.

இரண்டு பேருக்கு அதிகமாக பொது இடங்களில் (தேசிய பாதுகாப்புக்கு பங்கம் இல்லாத அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகள் தவிர்ந்த ஏனைய இடங்களில்) கூடுதல், திட்டம் தீட்டுதல், அதிக ஒலி எழுப்புதல் உட்பட ஆயுதங்களை உடமையில் (முகச் சவரம் செய்யும் அலகு, ஊசி என்பனவற்யைும்) வைத்திருத்தல் பாரிய குற்றமாறும்.

அத்துடன் தீவிரவாதத்திற்கு ஒத்துழைத்தல், நிதி சேகரித்தல் உட்பட பல விடயங்கள் இதற்குள் அடங்கும். 

சாதாரண சிவில் கடமைகளுக்கு கூட பொலிஸாரின் கைகளில் ஆயுதங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

அவசர கால தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர் ஒருவர் விசாரணைகள் எதுவும் இன்றி எவ்வளவு காலத்திற்கேனும் தடுத்து வைக்க முடியும்.

கைதுக்கு முன்னோ கைதுக்கோ பின்னரோ விசாரணை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

கைது செய்யப்படும் போது யாராவது தப்பியோட முயன்றால் சுட்டுப்பிடிப்பதற்கும் அதிகாரம் உள்ளது.

அதேவேளை கைது செய்யப்படும் நபர் தேவையெற்படின் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிப்பதற்கும் உரிமை உண்டு.

விசாரணைக்காக புலனாய்வுப் பிரிவினரின் கைகளுக்கும் ஒப்படைப்பதற்கான சரத்துக்களும் உண்டு.

மேலும், அவசரகாலச்சட்டமானது, மக்களின் அல்லது வாகனங்களின் போக்குவரத்துக்களை தடை செய்யவும், பாதுகாப்புப் பிரதேசங்களை உருவாக்கி, அங்கு வெளியிலிருந்து செல்பவர்களைத் தடுக்கவும் அனுமதி அளிக்கின்றது.

பாதுகாப்பு பிரிவினரின் கடமைக்குக் குந்தகம் விளைவிக்கும், குறிப்பிட்ட நபர்களை, குறிப்பிட்ட பகுதிக்கு வருவதற்கும், அல்லது குறிப்பிட்ட பிரதேசத்தில் வசிப்பதற்கும், தடைசெய்யும் அதிகாரத்தை வழங்குகின்றது.

மக்கள் வாழும் பகுதிகளில், உடனடியான பாதுகாப்புப் பிரதேசத்தை உருவாக்கி, அவர்களைப் பாதுகாக்கவும் காவற்துறையினர்க்கு அதிகாரம் அளிக்கின்றது.

யாரையும் அவர்களின் வீடுகளில் வைத்துக் கைது செய்வதற்கு அனுமதி வழங்க உள்துறை அமைச்சரிற்கு அதிகாரம் வழங்குகின்றது.

நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிப்பவர்கள் எனச் சந்தேகப்படும் யாரையும் கைது செய்து விசாரணை செய்ய முடியும்.

விழா மண்டபங்களையோ அல்லது திரையங்குகளையோ அல்லது கூட்டம் நடக்கும் இடங்களையோ, உடனடியாக மூடுவற்கும் அங்குள்ளவர்களை வெளியேற்றுவதற்கும் அனுமதி அளிக்கின்றது.

ஒரு கூட்டமோ, அல்லது சந்திப்புகளோ, அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் எனச் சந்தேகிக்கப்பட்டால், அதனைத் தடை செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தனியாரிடம் இருக்கும் ஆயுதங்களை, அனுமதி பெற்றிருந்தாலும் கூட, பறிமுதல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.