தன்னை ஜே.வி.பி செயற்பாட்டாளர்களே வெளியேற்றினர்! மோட்டிவேஷன் அப்பச்சி வெளியிட்ட காணொளி!
advertise here on top
advertise here on top

தன்னை ஜே.வி.பி செயற்பாட்டாளர்களே வெளியேற்றினர்! மோட்டிவேஷன் அப்பச்சி வெளியிட்ட காணொளி!

ஜே.வி.பி செயற்பாட்டாளர்கள் குழுவினால் தான் காலி முகத்திடலில் இருந்து அகற்றப்பட்டதாக சமூக ஊடக ஆர்வலர் மோட்டிவேசன் அப்பச்சி தெரிவித்தார். 

அவர்கள் ஏற்கனவே தங்களைப் பற்றி பொய்களை பரப்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜே.வி.பி குழுக்கள் இந்த போராட்டத்தை முன்னின்று நடத்த முயற்சித்தபோது, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், சமூக வலைத்தளங்களில் தனக்கு எதிராக பொய்யான தகவல்களை பரப்பி தன்னை அப்பகுதியிலிருந்து நீக்கியதாகவும் அவர் கூறுகிறார்.

மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாம் எந்தப் பணத்தையும் மோசடி செய்யவில்லை என்றும், தான் பெற்ற அனைத்து உதவிகளிலும் இளைஞர்களுக்கு உணவு, பானங்கள் வழங்கியதாகவும், இன்னும் கொஞ்சம் பணம் மீதம் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் தனது யூடியூப் பக்கத்தில் காணொளி மூலம் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.