மூன்று மாதங்களுக்கு முன்னர் வரகாபொல பகுதியில் நடந்த முச்சக்கர வண்டி விபத்தொன்றில் பேருவலையில் வசித்த கெகிராவயைச் சேர்ந்த முன்னாள் அதிரடிப்படை வீரரும், பின்னர் பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய, அலவி மெளலானா, ரவுப் ஹகீம் ஆகியோரின் மெய்ப்பாதுகாப்பாளராக கடமையாற்றிய முகம்மது இக்பால், அவரது மகன், பேரப்பிள்ளை ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.
இவர்களின் நான்காவது நபராக முகம்மது இக்பாலின் மனைவியான நிஹாரா டீச்சர் முன்று மாதங்களாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று 23 திகதி காலமானார்.
திக்வல்லையை பிறப்பிடமாகவும் மிக நீண்டகாலமாக பேருவலையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் பேருவளை நழீம் ஹாஜியார் மத்திய கல்லூரியின் பழைய மாணவியும் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற, பட்டதாரி ஆசிரியையும் ஆவார். இவர் பேருவளை மக்களினதும், மாணவ, மாணவியரினதும் மனதை வென்ற நற்குணங்கள் உள்ள சிறந்த ஆசிரியை.
இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று பேருவலையில் நடைபெறும்.
அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து, அவரது நற்காரியங்களை ஏற்றுக் கொண்டு, ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும்
சுவர்கத்தை வழங்குவானாக.
( தகவல் பேருவளை ஹில்மி)