
நாட்டில் தற்போது தடைப்பட்டுள்ள ஆட்சி முறை செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கு இந்த வாரத்திற்குள் புதியதொரு அரசாங்கத்தை ஸ்தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலே இந்த விடயத்தை தெரிவித்தார்
🔵 நமது Telegram குழுமத்தில் இணைய கீழே உள்ள Link இனை Click செய்யவும்
LINK: https://t.me/yazhnews
அதன் பின்ன நாடாளுமன்றுக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில் 19 ஆவது திருத்தம் உள்ளடக்கப்பட்டு அரசியல் திருத்தம் மேற்கொள்ளப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தில் பிரமருக்கு புதிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், நிறைவேற்று அதிகாரமுடை ஜனாதிபதி முறைமை தொடர்பில் அனைவடனும் இணைந்து தீர்மானம் மேற்கொள்ளப்படுமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
