நான் எந்த பக்கம் என்று எனக்கு தெரியவில்லை! பிரதமர் ரணிலின் இன்றைய உரை!
advertise here on top
advertise here on top
Join yazhnews Whatsapp Community

நான் எந்த பக்கம் என்று எனக்கு தெரியவில்லை! பிரதமர் ரணிலின் இன்றைய உரை!


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது பாராளுமன்றத்தில் எந்தப் பக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது என்பது தனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார். 

இன்று சபையில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் தன்னால் பங்கேற்க முடியாது எனவும், ஆளும் கட்சியின் கூட்டங்களிலும் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.

 "நான் இன்னும் பாலத்தின் நுழைவாயிலில் நிற்கிறேன், இப்போது நான் அதன் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை," என்று அவர் கூறினார்.

 பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இந்த தகவலை வெளியிட்டார். 

பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அப்பதவிக்கு நியமிக்கப்படுவதை தான் விரும்புவதாக தெரிவித்தார்.

 ஆனால், பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பம் அதுவல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது என்று பிரதமர் விக்ரமசிங்க கூறினார். (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.