
வெளிநாட்டு செய்தி சேனல் ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர், இலங்கையின் கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனது குறித்து தான் வெட்கப்படுவதாக கூறினார்.
இந்த பொருளாதார நெருக்கடிக்கு கடந்த நிர்வாகமே காரணம் எனவும், இன்று இலங்கை வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பதவி விலக வேண்டுமா என ஊடகவியலாளர் பிரதமரிடம் வினவியதோடு, இதுவரை இரண்டு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்பதே இளைஞர் சமூகத்தினதும் சில அரசியல் கட்சிகளினதும் கருத்து எனவும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சட்டத்தரணிகள் சங்கம் அவ்வாறான விடயத்தை தெரிவிக்கவில்லை எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)