
மேலும் இரண்டு கப்பல்களில் இருந்து பெற்றோல் மற்றும் டீசல் ஏற்றுமதிகளை இறக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், தொடர்ந்து எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எரிபொருளைப் பெறுவதற்காக நேற்றிரவு வரை நாட்டில் பல பகுதிகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். (யாழ் நியூஸ்)