
சந்தேகநபர் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை (27) தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பாததால் குழந்தை காணாமல் போனதாக பெற்றோரால் புகார் அளிக்கப்பட்டது.
பண்டாரகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததைத் தொடர்ந்து குழந்தையின் சடலம் மறுநாள் (28) அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இருந்து மீட்கப்பட்டது.
சிறுமி வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸ் குழுக்கள், சிறுமி தனது வீட்டிலிருந்து 150 மீற்றர் தொலைவில் சிசிடிவி கமராக்கள் இல்லாத இடத்தில் சம்பவத்தினை எதிர்கொண்டதாக முன்னர் நடந்த விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளின் போது அட்டலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)