நிரந்தர வீதித் தடைகளைப் பயன்படுத்தி கொழும்பு கோட்டையைச் சுற்றியுள்ள பல வீதிகளைத் தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்படி கொழும்பு கோட்டை, யோர்க் வீதி, வங்கி வீதி உள்ளிட்ட பல வீதிகள் மூடப்பட்டு ஒரு பகுதி மாத்திரம் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.
பல்கலைகழக மாணவர் சம்மேளனம் (IUSF) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதுடன், ஆர்ப்பாட்ட பேரணியை நிறுத்துமாறு கோட்டை பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் நேற்று நிராகரித்துள்ளார். (யாழ் நியூஸ்)