
இந்த தாக்குதலில் சந்தேக நபரின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வேபட வடக்கில் வசிக்கும் 33 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கானவரின் சகோதரி மற்றும் நண்பி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சந்தேக நபர் பொலிஸ் பாதுகாப்பில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெலிவேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.