ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இன்று(2) மாலை 6.00 மணி முதல் எதிர்வரும் 04 ஆம் திகதி காலை 6.00 மணி வரை எந்த ஒரு பொதுவீதி, பூங்கா, பொழுதுபோக்கு அல்லது பிற மைதானங்கள், தொடருந்து பாதைகள், கடற்கரை போன்றவற்றில் எவரும் அனுமதியின்றி நடமாட நிபந்தனைகளுடன் குறித்த வர்த்தமானி ஊடாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாதுகாப்பு செயலாளர்கள் அல்லது பொது பாதுகாப்பு அமைச்சகங்கள், காவல்துறைமா அதிபர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களின் எழுத்துப்பூர்வ அனுமதியல்லாமல் மேற்குறித்த இடங்களில் நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ள எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமத்தில் இணைவதை தவிர்த்துக்கொள்ளவும்.