நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்!
advertise here on top
advertise here on top

நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்!


நேற்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த மக்கள் அவசர கால நிலைமையை ரத்துச் செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் வௌியிட்டுள்ளார்.

இலங்கையில் மக்கள் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வௌியிட்டிருந்தார்.

கடந்த சில தினங்களாக நாட்டில் இடம்பெற்றுவரும் மக்கள் எதிர்ப்பு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு தமது எதிர்ப்பை வௌிப்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.