
மார்ச் 22ஆம் திகதி முதல் வடக்கு கடல் பகுதியில் இந்தியாவுக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை மற்றும் காக்கைதீவு பிரதேசத்தில் வசிக்கும் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் நேற்று அனுமதியின்றி இராமேஸ்வரம் கடற்பகுதியில் பிரவேசித்ததோடு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவில் மூன்று சிறு குழந்தைகளும் அடங்குவர், அவர்கள் நெடுங்கேணி கடற்கரையிலிருந்து மீன்பிடி இழுவை படகில் இருந்து கடல் வழியாக இந்தியாவின் தனுஷ்கோடி கடற்கரையை வந்தடைந்த பின்னர் ராமேஸ்வரம் கடலோரக் காவல்படையினரால் கடந்த 24ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எந்தவித பாதுகாப்பும் இன்றி கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சிறிய படகுகளில் கடல் மார்க்கமாக இந்தியா செல்வது ஆபத்தான சூழ்நிலை எனவும், அகதி முகாம்களுக்கு வந்தவர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிகள் காரணமாக தாம் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, நாளுக்கு நாள் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லும் மக்கள் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)