
சமூக வலைத்தளங்களில் பரவிவரும் பிரசாரம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சில சமூக ஊடக செய்திகளின்படி, பிரதமர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்தக் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச காலமானார் எனவும் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)