இலங்கை வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்து பற்றாக்குறை !
advertise here on top
advertise here on top

இலங்கை வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்து பற்றாக்குறை !

இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் பல சர்வதேச நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளதாக மருந்துப் பொருட்கள் வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தும் அரச அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது 40 வகையான மருந்துகள் உட்பட பல அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாட்டில் உள்ள வைத்தியசாலைகளுக்கு 1,325 வகையான மருந்துகள் வழங்கப்படுவதாக தெரிவித்த ரத்நாயக்க, அவற்றில் 400 அத்தியாவசிய மருந்துகள் எனவும், 10 உயிர்காக்கும் மருந்துகள் எனவும் தெரிவித்தார்.

தற்போது தேவைப்படும் 40 வகையான மருந்துகளில் சில அத்தியாவசிய மருந்துகள் இதயத்தில் இரத்தம் உறைவதைத் தடுக்க உதவுவன என ரத்நாயக்க தெரிவித்தார்.

அமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு காரணமாக மருந்துகளுக்காக ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் போதுமானதாக இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருந்துப் பொருட்கள் வழங்கல் மற்றும் ஒழுங்குமுறைக்கான இராஜாங்க அமைச்சின் செயலாளர், மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பதிலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார். (யாழ்
நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.