ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலகக் கோரி இம்மாதம் 28ஆம் திகதி அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் முன்னெடுக்கவுள்ள ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு தபால் திணைக்கள ஊழியர்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரிகள் ஆதரவு வழங்குவதாக இலங்கை தபால் சேவை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கட்சி, நிறம், இனம், மதம் என்ற பேதமின்றி உயிர் பிழைப்பதற்கான போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு வழங்குவதாக இலங்கை தபால் சேவை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சம்பிக்க பெரேரா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)