இன்று (15) காலி முகத்திடலில் நடைபெறவிருப்பதாகக் கூறப்படும் ஜும்ஆத் தொழுகை தொடர்பான அறிவித்தல் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று (15) காலி முகத்திடலில் நடைபெறவிருப்பதாகக் கூறப்படும் ஜும்ஆத் தொழுகை தொடர்பான அறிவித்தல் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

15.04.2022

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு,

ஜுமுஆத் தொழுகை என்பது ஒரு மகத்தான அமலாகும். அதனை நிறைவேற்றுவதற்கு மார்க்கத்தில் ஒழுங்குகளும் முறைகளும் உள்ளன. குறிப்பாக மார்க்க அறிஞர்கள் அதற்கான சட்ட வரையறைகளைக் குறிப்பிட்டுள்ளனர். இவ்வடிப்படையிலேயே ஜுமுஆத் தொழுகையை நாம் எமது நாட்டில் அன்று தொட்டு இன்று வரைக்கும் நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகின்றோம்.

ஆகவே, எமது ஜுமுஆக்களை பொது இடங்களிலும் ஆர்ப்பாட்ட மைதானங்களிலும் அமைத்துக் கொள்ளாது மஸ்ஜித்களிலேயே அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் வேண்டிக் கொள்கின்றது.

வஸ்ஸலாம்.

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

✅ Join our WhatsApp Group:

எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளவும்.

https://chat.whatsapp.com/Ki9M3UYgZ3913TAYkRPC5v

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.