பெறுமதி சேர் வரிச்சட்டத்தில் (VAT) திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்க நிதிப் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
அரசாங்க நிதி பற்றிய குழு, நேற்று கூடிய போது 2002 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
பாதீட்டின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காகவும், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிக் கொள்கை முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தவும் இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிதிச் சேவை வழங்கலுக்கு பெறுமதி சேர் வரியானது 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.
குறித்த திருத்தச் சட்டமூலம் நாளைய தினம் (24) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.