அரசாங்க தகவல் நிலையம் ஒரு புதிய அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் கோவிட்-19 தடுப்பூசி நிலையை சரிபார்க்க முடியும்.
பொதுமக்கள் தங்களின் தடுப்பூசி நிலையை சரிபார்க்க 1919 என்ற எண்ணுக்கு SMS ஒன்றை அனுப்பி தகவலை பெற்றுக்கொள்ளலாம்.
தற்போதைய கோவிட்-19 தடுப்பூசி அட்டைக்கு மாற்றாக இந்த அமைப்பு கருதப்படுகிறது.
அதன்படி, கீழ்காணும் முறையில் உங்கள் கையடக்கத் தொலைபேசியில் இருந்து SMS ஒன்றை அனுப்புவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
VAC<இடைவெளி>NIC எண்ணை டைப் செய்து 1919க்கு அனுப்பவும்.
VAC<space>NIC Number & send to 1919