அதன்படி, சமூக வலைதளங்களில் ஜனாதிபதிக்கு ஆதரவாக பேசுபவர்களும், அவரை எதிர்ப்பவர்களும் தற்போது புதிய பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவாக #WeAreWithGota என்ற கோஷத்தை பயன்படுத்தியுள்ளனர்.
உலகில் உள்ள அனைவரும் எதிர்கொள்ளும் பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு இலங்கை முகங்கொடுத்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அரசாங்க தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மிலிந்த ராஜபக்ஷ, எண்ணெய் வரிசைகள் இலங்கைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல எனவும் பொருட்களின் விலை அதிகரிப்பு இலங்கைக்கு மாத்திரமல்ல எனவும் குறிப்பிட்டார்.
"நம் அனைவருக்கும் ஒரு பிரச்சனை உள்ளது, பலர் போரை நிறுத்த முடியாது இருந்தனர் ஆனால் நாம் அதை செய்தோம்" என்று அவர் கூறினார்.
கொவிட் தொற்றைப் போன்று இந்த பொருளாதார நெருக்கடியும் சமாளிக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மிலிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஜனாதிபதியின் திட்டத்தை விமர்சிப்பவர்கள் #GoHomeGota என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு தொலைநோக்குப் பார்வை இல்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். (யாழ் நியூஸ்)