
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வாகனங்களுக்கு மட்டுமே டீசல் வழங்கப்பட வேண்டும் என சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் CPC அறிவித்துள்ளது.
இந்த உத்தரவை மீறும் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக CPC மேலும் தெரிவித்துள்ளது.
அறிவுறுத்தல்களை மீறும் முறைப்பாடுகளுக்கு எதிராக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விநியோகஸ்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என CPC மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)