கட்டாரில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு இலக்கை அதிகரிப்பது தொடர்பில் நாமல்!
advertise here on top
advertise here on top

கட்டாரில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு இலக்கை அதிகரிப்பது தொடர்பில் நாமல்!


உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தற்போது கட்டார் சென்றுள்ள இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சர்வதேச கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அப்துல் அஸீஸ் அல் அன்சாரியை சந்தித்துள்ளார்.


இலங்கையர்களுக்கான கத்தாரில் மூன்று லட்சம் வரை வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு இலங்கை உத்தேசித்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று (13) டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 


இந்த நடவடிக்கை இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தை நிவர்த்தி செய்வது மட்டுமின்றி, வெளிநாட்டு வருவாயையும் அதிகரிக்கும் என்றார்.


அமைச்சர் ராஜபக்ஷவுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு, பிரியங்கர ஜயரத்ன மற்றும் விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க ஆகியோரும் சென்றிருந்தனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.