முழுமையான கொவிட் தடுப்பூசிகளை பெறாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கு வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஐவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர் குழாமின் பெரும்பான்மை தீர்மானத்துக்கமைய குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவிக்கப்பட்டுள்ளது.