மின்வெட்டு தொடர்பில் அதிகாரிகள் பொதுமக்களிடம் ஏன் பொய் கூறுகின்றனர் என சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வாரம் 10 மணிநேரம் மின்வெட்டு இருக்கக்கூடும் என கடந்த வாரம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த போதிலும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அதனை மறுத்திருந்தார்.
ஆனால் இன்று, நாளை (30) புதன்கிழமை 10 மணி நேரம் மின்வெட்டு இருக்கும் என பொதுப் பயன்பாட்டு ஆணையம் உறுதி செய்துள்ளது.
"உண்மையை அறிந்துகொள்ளும் உரிமை எங்களுக்கு உண்டு. அதிகாரிகள் மக்களிடம் பொய் உரைப்பது முற்றிலும் அவமானகரமானது: என்று சாலிய பீரிஸ் ட்வீட் செய்துள்ளார். (யாழ் நியூஸ்)