நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் தனது பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரிழந்தவர் அப்பகுதியில் வசிக்கும் 37 வயதுடையவர் என வெலிபென்ன பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று நாட்களாக வீட்டில் உண்பதற்கு எதுவும் இல்லை எனவும், பிள்ளைகளுக்கு உணவு எடுத்துவரச் சென்ற கணவன் உயிரிழந்துள்ளதாகவும் அவரது மனைவி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கணவன் வர தாமதமானதால் வீட்டில் இருந்த இரண்டு நாற்காலிகளை விற்று குழந்தைகளுக்கு சமைப்பதற்கு ஏதாவது வாங்கித் தந்ததாகவும் அவர் கூறினார்.
தானும் குழந்தைகளும் வாடகை அறையில் வசித்ததாகவும், கணவர் இறந்த பிறகு தனது குழந்தைகளுடன் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும், வேலை அல்லது தங்குவதற்கு இடம் கூட இழந்ததாகவும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)