
அதன்படி, காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் 3 மணி நேர மின்வெட்டும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேர மின் வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
மேலும் E மற்றும் F பகுதிகளுக்கு காலை 8.30 முதல் மாலை 4.30 வரையான காலப்பகுதியில் 4 மணி நேரம் மின்வெட்டும் மற்றும் மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் 3 மணி நேர மின்வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமையன்று (06) காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் A,B,C பகுதிகளுக்கு மட்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இவ்வாறு மின் வெட்டு அமுல்ப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.