![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDVZH1OUQ9JnerpCjy-EgipFWiw11GCcsziJU9uUKDbuMzF5X63TfD6z0pXDS6F9yr-Z-DtFWUN9GR-n8hHaveSsO0qpqqDZJdSIOHMXQf6XzMKbpm7Ww7ZYEiNS24NjALr7X6BA_BLdnyxM7QvfJSoyi37xViktZ06Efry3YwXrSfLihbDRLYx3ng/s16000/kjip.jpg)
மின்வெட்டு காரணமாக கடைகளில் குளிர்சாதனப் பெட்டிகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் காலாவதியாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் இவ்வாறு உணவுகளை விற்பனை செய்த 407 விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
எனவே, குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்துமாறு உபுல் ரோஹன கேட்டுக்கொள்கிறார்.