நாளை (23) நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, ஏ முதல் எல் வரையிலான பிரிவுகளில் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 3 மணி நேரம் 20 நிமிடங்களும், மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும், P முதல் W வரையிலான பிரிவுகளில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 1 மணி நேர மின் வெட்டும் மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடமும் மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.