இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு அதிகரிக்கப்பட்ட விசேட வரி விபரம்!
advertise here on top
advertise here on top

இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு அதிகரிக்கப்பட்ட விசேட வரி விபரம்!


இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு மேலதிகமாக இறக்குமதி செய்யப்படும் பழங்கள் உள்ளிட்ட 9 பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட சரக்கு வரி அதிகரிப்பு அடுத்த 06 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.


இம்மாதம் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கத்தின் விசேட சரக்கு அறவீடு சட்டத்தின் கீழ் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வரியை அதிகரித்துள்ளார்.


2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட கலால் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தயிர், பாலாடைக்கட்டி, வெண்ணெய், பேரீச்சம்பழம், ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள் மற்றும் பிற பழங்கள் மீதான வரி அதற்கேற்ப உயரும்.


சமீபத்தில், இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் உட்பட 367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.


இதேவேளை, 2017ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க விசேட சரக்கு வரிச்சட்டத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 03ஆம் திகதி நிதியமைச்சர் விசேட சரக்கு வரி விதித்துள்ளார்.


இதன்படி, ஒரு கிலோகிராம் கானாங்கெளுத்திக்கு (Mackerel) 600 ரூபாவும், கௌபி ஒரு கிலோகிராம் ஒன்றுக்கு 200 ரூபாயும், குரக்கன் கிலோவுக்கு 70 ரூபாயும் இறக்குமதி வரி விதிக்கப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.