குற்றவியல் சட்டத்தின் கீழ் தானும் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்தே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்கு தானும் தனது குழுவினரும் எந்த குற்றமும் செய்யவில்லை என்று அவர் கூறுகிறார். (யாழ் நியூஸ்)