தேவையான எரிபொருள் கிடைக்கப்பெற்றுள்ளதாலும் நாடளாவிய ரீதியில் விநியோகம் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.
நுகர்வோர், சாதாரண அளவை விட அதிகமாக எரிபொருளை நிரப்புவதும், கேன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருளை சேமிப்பதும் தான் இந்த திடீர் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு காரணம் என சுட்டிக்காட்டினார்.
நாட்டுக்கு வந்துள்ள எரிபொருள் கப்பல்களிலிருந்து எரிபொருள் இறக்கும் பணி இடம்பெறுவதாகவும் தேவையான அளவு எரிபொருளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே, நுகர்வோர்கள் பீதியடைய வேண்டாம் எனவும், வரிசையில் நிற்பதைத் தவிர்த்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போதுமான அளவு டீசல், பெற்றோல், உலை எண்ணெய், ஜெட் எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றைக் கொண்ட கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன என்றார்.
தற்போது இரண்டு கப்பல்களிலிருந்து டீசல் இறக்கப்பட்டு வருவதாகவும் மேலும் இரண்டு கப்பல்கள், திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
Grand welcome for Diesel bowser at Kiribathgoda pic.twitter.com/1L4kPmeV9r
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) March 5, 2022