அமெரிக்க உதவி செயலாளர் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டவை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமெரிக்க உதவி செயலாளர் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டவை!


அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் இன்று (23) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்தார்.


இன்று காலை சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட விடயங்கள், அதன் முன்னேற்றம் மற்றும் வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி திருமதி நுலாந்திடம் விளக்கினார்.


வரவேற்புரையாற்றிய உதவிச் செயலாளர், கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம்பெயர் மக்களுடன் பேச்சுக்களை நடத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்த ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ராஜபக்ஷ, வடமாகாணத்தின் அபிவிருத்தியில் முதலீடு செய்யுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.


அமெரிக்காவில் உள்ள பசுமைத் தொழில்நுட்பத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தவும் இணையம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருமதி நுலாண்ட் தெரிவித்தார். நாட்டில் கல்வி வசதிகள் தொடர்பில் கவனம் செலுத்திய உதவிச் செயலாளர், தனியார் துறையினரின் பங்களிப்புடன் உயர் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த முடியும் என சுட்டிக்காட்டினார்.


நாட்டின் பொருளாதாரத்தில் கோவிட் தொற்றுநோய் மற்றும் பிற நிகழ்வுகளின் தாக்கத்தைத் தணிக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்தார். திருமதி நுலாந்த் இந்த முடிவைப் பாராட்டினார், அத்துடன் உண்மையைக் கண்டறியும் பொறிமுறையால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் திருத்தம் ஆகியவற்றைப் பாராட்டினார்.


புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் மின் உற்பத்திக்கான சாத்தியங்களை விரிவுபடுத்துவதற்கு உதவுமாறு ஜனாதிபதி ராஜபக்ஷ தூதுக்குழுவிற்கு அழைப்பு விடுத்தார்.


உதவி இராஜாங்கச் செயலாளர் டொன் லு, அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், பாதுகாப்புப் பிரிவின் பிரதான பிரதி உதவிச் செயலாளர் அமண்டா டோரி, அரசியல் அதிகாரி ஜெஃப் சானின், இராஜாங்கச் செயலாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் கலந்துகொண்டனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.