சாய்ந்தமருதில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதன் தலைவர் அனுர திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்த இரு கட்சிகளினால் எமது நாடு முற்றாக அழிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று மக்கள் எரிபொருள் எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாட்டைச் சந்தித்து வருவதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், அவர்களிடையே மகிழ்ச்சியான கூட்டம் ஒன்றும் இருப்பதாகவும், அக்கூட்டமானது, அமைச்சர்கள் உள்ளிட்ட திருடர்களை நம்பியிருக்கும் வணிகக் கூட்டம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)