பெப்ரவரி 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையஒ மேற்கோள் காட்டி, மியன்மார் அரிசி மொத்த விற்பனைக் கிடங்கின் செயலாளர், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிசியின் (FOB) விலை டன் ஒன்றுக்கு US$ 340-$350 க்கு இடையில் உள்ளது, அதே நேரத்தில் ஏற்றுமதி விலை இலங்கைக்கு ஒரு டன் ஒன்றுக்கு $440 முதல் $450 வரை மாறுபடும்.
“மியன்மாரின் அரிசி கடந்த வருடம் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அது வெற்றியளித்துள்ளது. இலங்கை அண்டை நாடுகளில் ஒன்றாகும். மியான்மரில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கும் அரிசியை ஏற்றுமதி செய்ய முடியும்” என்று அவர் மேலும் கூறினார்.
மேலும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கான அரிசி ஏற்றுமதி மிகவும் குறைவான கட்டுப்பாடே உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது, இரண்டு நாடுகளின் அரசாங்கங்களும் 100,000 தொன் வெள்ளை அரிசி மற்றும் 50,000 தொன் புழுங்கல் அரிசியை தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளில் (2022 மற்றும் 2023) இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) ஜனவரி 7 ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளன.
முழு செய்தி அறிக்கையையும் படிக்க கீழே க்லிக் செய்யவும்
https://www.gnlm.com.mm/myanmars-rice-export-to-sri-lanka-fetches-high-prices/amp/