இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரின் இலங்கை விஜயத்தின் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆறு இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான உடன்படிக்கைகள் நேற்று (28) பிற்பகல் வெளிவிவகார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இலங்கை டிஜிட்டல் அடையாளத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் ஒன்றை நிறுவுதல் மற்றும் யாழில் வெளியில் உள்ள மூன்று தீவுகளில் கலப்பின மின் நிலையத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
மேலும், இலங்கையில் மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கும், இந்தியாவின் காலி மாவட்டத்தில் உள்ள 200 பாடசாலைகளில் நவீனமயமாக்கப்பட்ட கணினி ஆய்வகங்களை அமைப்பதற்கும் சுஷ்மா சுராஜ் வெளிநாட்டு சேவை நிறுவனம் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கைச்சாத்திடப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)