பொருளாதார நெருக்கடி தொடர்பில் பரவிவரும் போலி செய்தி தொடர்பில் பொலிஸாரின் ஊடக அறிவிப்பு!
advertise here on top
advertise here on top

பொருளாதார நெருக்கடி தொடர்பில் பரவிவரும் போலி செய்தி தொடர்பில் பொலிஸாரின் ஊடக அறிவிப்பு!


இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் "கவனமாக இருங்கள், பொருளாதார நெருக்கடி" என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் 22 புள்ளிகளுடன் பரவிவரும் செய்தி போலியானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், இவ்வாறானதொரு செய்தி பொலிஸாரால் எந்தவொரு ஊடக நிறுவனத்திற்கும் வழங்கப்படவில்லை எனவும், இவ்வாறான போலிச் செய்திகள் பொலிஸ் திணைக்களத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகவும் வலியுறுத்தியுள்ளது.


பொலிஸ் திணைக்களம் பொது மக்களுக்காக ஏதேனும் தகவல்தொடர்பு அல்லது செய்திகளை வெளியிட விரும்பினால், அது பொலிஸ் ஊடகப் பிரிவினால் உத்தியோகபூர்வ செய்திக்குறிப்பு மூலம் வெளியிடப்படும் என்று அது மீண்டும் வலியுறுத்தியது.


இவ்வாறான போலிச் செய்திகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், இந்தப் போலிச் செய்திகளை உருவாக்கியவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடக அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.