எதிர்காலத்தில் நாட்டில் நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் மழைவீழ்ச்சி குறைந்து செல்வதன் காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் ஆண்டுதோறும் பெய்யும் மழை முறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
மரத் தேவைக்காக மரங்களை வெட்டும்போது நிலத்தடி நீர் ஆதாரங்கள் அழிந்து போவதாலும் நிலத்தடி நீர் வளம் குறைவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனால், பயன்படுத்தப்படும் நீரை நிலத்தடி நீர் ஆதாரங்களுக்குத் திருப்பி விடுமாறு புவியியலாளர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
வாரியபொலவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிலத்தடி நீர் பிரிவின் வடமேல் மாகாண முகாமையாளர் உபுல் விக்கிரமரத்ன இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)