பல வெளிநாட்டு சேனல்கள் PEO TVயில் ஒளிபரப்பை நிறுத்திவிட்டதாக அந்நிறுவனம் இன்று (30) அறிவித்துள்ளது.
இலங்கையில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இந்த இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக PEO TV தெரிவித்துள்ளது.
சேனல்கள் நிறுத்தப்பட்டதை அறிவிக்கும் சிறப்பு அறிவிப்பில் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கோரியது.
PEO TV நிறுவனம் மேலும் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் சேவையை மீட்டெடுக்கும் என்று உறுதியளித்துள்ளது.
சேனல்களின் இடைநிறுத்தம் தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) ஒளிபரப்பையும் பாதித்துள்ளது.
இந்நிலையில், IPL போட்டிகளும் ஒளிபரப்பப்படவில்லை என கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
IPL போட்டிகளை உள்ளூர் சேனல்களில் ஒளிபரப்ப விரும்பிய உள்ளூர் தொலைக்காட்சி சேனலும் விலகியுள்ளது.
டாலரில் பணம் செலுத்துவதில் உள்ள சிரமங்கள் காரணமாக சேனல் பின்வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. (யாழ் நியூஸ்)
எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளவும். https://chat.whatsapp.com/H57lBYDLpJ5Lq7gmNXcqNU