உக்ரைன் உடனான சமாதான உடன்படிக்கைக்கு புடின் முன்வைத்துள்ள 6 நிபந்தனைகள்!
advertise here on top
advertise here on top

உக்ரைன் உடனான சமாதான உடன்படிக்கைக்கு புடின் முன்வைத்துள்ள 6 நிபந்தனைகள்!


உக்ரைனுடன் அமைதிக்கான தனது கோரிக்கைகளை ஜனாதிபதி விளாடிமிர் புடின் விவரித்து தொலைபேசியில் பேசிய விவரங்கள் தற்போது கசிந்துள்ளன.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வியாழக்கிழமை பிற்பகல் துருக்கிய ஜனாதிபதி தையிப் எர்தோகனுடன் தொலைபேசியில் உரையாடிய நிலையில் உக்ரைனுடனான சமாதான உடன்படிக்கைக்கான தனது நிபந்தனைகள் என்ன என்பதையும் விளக்கியுள்ளார்.

குறித்த தொலைபேசி அழைப்பின் போது, ஜனாதிபதி எர்தோகனின் முன்னணி ஆலோசகரும் செய்தித் தொடர்பாளருமான இப்ராஹிம் கலினும் மறுமுனையில் கேட்டுக்கொண்டிருந்த அதிகாரிகளில் ஒருவர் என தெரிய வந்துள்ளது.

அவை பின்வருமாறு, 

1. உக்ரைன் கண்டிப்பாக நேட்டோ அமைப்பில் இணையக் கூடாது எனவும், உக்ரைன் நடுநிலையாக இருக்க வேண்டும்.

2. ரஷ்யாவிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை உறுதிப்படுத்த உக்ரைன் ஆயுதக் குறைப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

3. உக்ரைனில் ரஷ்ய மொழியை பாதுகாக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

4. கிரிமியா ரஷ்யாவின் பிரதேசமாக அங்கீகரிக்கப்படும். 

5. டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய மக்கள் குடியரசுகளுக்கு சுதந்திரம் வழங்கப்படும். 

6. உக்ரைனின் இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியாக ரஷ்ய மொழி மாறுகிறது மற்றும் அதன் பயன்பாட்டை தடைசெய்யும் எந்தவொரு சட்டமும் நீக்கம் செய்யப்பட்ட வேண்டும். 

மேலும், சில பேச்சுவார்த்தைகள் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் நேருக்கு நேர் இருக்க வேண்டும் என்றும் புடின் வலியுறுத்தியதாக தெரிய வந்துள்ளது.

ஆனால், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் ஜெலென்ஸ்கி முன்வைக்கும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று, புடினுடன் நேருக்கு நேர் இந்த விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்பதே.

இதனிடையே, இந்த சமாதான ஒப்பந்தமானது இலக்கை அடைய நீண்ட நேரம் ஆகலாம் எனவும், ரஷ்யா சின்னாபின்னமாக்கியுள்ள நகரங்களை உக்ரைன் மீண்டும் கட்டும் வரை நீண்ட காலம் ஆகும் என்றே நிபுணர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்நிலையில், குறிப்பிடும் அளவுக்கு இந்த வாரத்தில் ரஷ்ய துருப்புகளால் முன்னேற்றம் காண முடியவில்லை என்றே உக்ரைன் தொடர்பில் பிரித்தானிய உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.