
அதனடிப்படையில், உடன் அமுலாகும் வகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதியை 230 ரூபாவாக குறைக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
நாணய மாற்று விகிதம் சந்தையை அதிக நெகிழ்வுத்தன்மையுடன் வர்த்தகம் செய்ய அனுமதிக்கும் மற்றும் அதன் நோக்கம் நிதித்துறை ஸ்திரத்தன்மையை அடைவதாகும்.
உள்நாட்டு அந்நியச் செலாவணிச் சந்தையின் போக்குகளை உன்னிப்பாகக் கண்காணித்து, தேவைக்கேற்ப பொருத்தமான கொள்கை மாற்றங்களைச் செய்ய எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
