சட்டவிரோத பொருட்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட பிரிவின் ஊடாக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் ஆயிரத்துக்கும் அதிகமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு , இதுவரை 21 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்த பிரிவின் ஊடாக 78 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சட்ட விரோத சொத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளதோடு, சட்ட விரோத பணபரிமாற்ற சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.