
மேற்படி பட்டியலில் இருந்து கிரீடம் மற்றும் விவசாயி ஆகிய சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.
இரண்டு சின்னங்களும் தேசிய சின்னங்களுக்கு ஒத்ததாக இருப்பதால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதன்காரணமாக, அரசியல் கட்சிக்கு சின்னமாக ஒதுக்க கூடாது என்றும், எதிர்காலத்தில் நாட்டின் எந்த அரசியல் கட்சியும் இதனை பயன்படுத்த அனுமதிக்க போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.