நாடு தழுவிய மின்வெட்டு அட்டவணை வெளியானது!
advertise here on top
advertise here on top

நாடு தழுவிய மின்வெட்டு அட்டவணை வெளியானது!


இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை தினமும் (23) நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


நாட்டின் பல மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்காமை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.


அதன்படி, முன்னதாக வௌியிடப்பட்ட மின்வெட்டு அட்டவணைக்கமைய A,B,C குழுக்களுக்கு சுழற்சி முறையில் 4.40 மணித்தியால மின்வெட்டு அமல்ப்படுத்தப்படவுள்ளது.


மேலும், ஏனைய குழுக்களுக்கு குறித்த காலப்பகுதியில் 4.30 மணித்தியால மின்வெட்டு அமுப்படுத்தப்படவுள்ளது.


இதேவேளை, பொதுப் பயன்பாட்டு திணைக்களம் மின்வெட்டு நேர அட்டவணையை வௌியிட்டுள்ளது.


இதற்கமைய, நாளை பிற்பகல் 4.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணி வரை சுழற்சி முறையில் குறித்த மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.