பெப்ரவரி 26 சனிக்கிழமை முதல், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகள் பயணத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன் நடாத்தப்படும் எதிர்மறை PCR பரிசோதனையை முன்வைக்க வேண்டிய அவசியமில்லை என்று துபாய் அறிவித்துள்ளது.
அதற்குப் பதிலாக, தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகள், QR குறியீட்டுடன் முழுமையான தங்களின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பயணிகள், விமானம் புறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட எதிர்மறை PCR சோதனையை வழங்க வேண்டும்.
அறிவிக்கப்பட்ட மற்றைய மாற்றங்களுக்கு அமைய, வெளியில் முகக்கவசம் அணிவது இப்போது துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதிலும் கட்டாயம் இல்லை, இருப்பினும் உட்புற மற்றும் பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். (யாழ் நியூஸ்)